• Dec 26 2024

புதுச்சேரியில் விஜய்யை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் செட்டப்பா? பிரபல பத்திரிகையாளர் தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


புதுச்சேரியில் விஜய்யை பார்க்க வந்த கூட்டம் செட்டப் செய்து வரவழைக்கப்பட்ட கூட்டம் என பிரபல பத்திரிகையாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இன்றைய படப்பிடிப்பில் விஜய் உடன் மோகன், சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்து இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் வெளியே வந்து வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு கைகாட்டி வரும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



இந்த நிலையில் இதற்கு முன் விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஏதாவது ஒரு சில இடத்தில் மட்டுமே இவ்வாறு நடக்கும், நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது நடந்தது. ஆனால் புதுச்சேரியில் தினமும் நடப்பதை பார்க்கும் போது இது செட்டப் செய்து வந்த கூட்டம் போல் தெரிகிறது என்று பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளே தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களிடம் தகவல் கொடுத்து புதுச்சேரிக்கு வரச் சொல்லி இருப்பதாகவும், இதனால் தான் தினந்தோறும் புதுச்சேரியில் விஜய்யை பார்க்க கூட்டம் கூடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் விஜய் ரசிகர்களை புஸ்ஸி ஆனந்த் செட்டப் செய்யும் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய்யை பார்க்க வந்த கூட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு வரவழைக்கப்பட்ட கூட்டமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

Advertisement

Advertisement