• Apr 25 2026

பார்வையால் கொள்ளை கொள்ளும் ஜோவிகா! இளசுகளின் மனதை வருடிய வீடியோ படுவைரல்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் அவர்களின் மகளும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான ஜோவிகா தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். இந்த புதிய புகைப்படங்களில் ஜோவிகா மிகவும் கியூட்டாகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றுகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜோவிகா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். அதனை தொடர்ந்து, தற்போது திரைப்படங்களிலும் நடித்து தனது கலைப்பயணத்தை விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி, ஃபேஷன் மற்றும் ஸ்டைல் தேர்வுகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிகா, அவ்வப்போது தனது புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார். இந்நிலையில், தற்பொழுது வெளியான வீடியோ ரசிகர்களிடையே விரைவாக வைரலாகி, அதிக லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement