• Apr 25 2026

திருமண நாளில் நண்பர்களுடன் குதூகலம்! வெளியானது அஜித் பார்டி புகைப்படங்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோரின் திருமணம் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று சென்னையில் நடைபெற்றது. ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்து, பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திரையுலகில் மிகவும் விரும்பப்படும் தம்பதிகளில் ஒருவராக இவர்களை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், தங்களது திருமண நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்காக ஒரு சிறப்பு விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இயக்குனர் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பல ஆண்டுகள் கடந்தாலும் அஜித் – ஷாலினி தம்பதிகளின் உறவு ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. அவர்களின் திருமண நாள் கொண்டாட்டம், அவர்களுக்கிடையேயான அன்பையும் உறுதியான உறவையும் மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement