தமிழ் சினிமா உலகத்தில் படங்களின் ரிலீஸுக்கான போட்டி நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. அதில், பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் யுத்தமாகவே மாறும்.
அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடித்துள்ள படங்கள் மோதுவதற்கான சூழ்நிலை தற்பொழுது உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் புதிய படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், இந்தப் படம் வரும் 2025 தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறைகள் போன்ற தினங்களில் படம் ரிலீஸாவது வழக்கம். இந்த நேரத்தில் ரிலீஸாகும் படங்களுக்கு தியட்டர்களிலும், வணிக ரீதியிலும் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதனாலேயே அந்த தினங்களில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
அதே நேரத்தில், சூர்யாவின் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்ததை அடுத்து நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ பட ரிலீஸ் பற்றி பல கேள்விகள் எழுந்தன. முன்னர், ‘சர்தார் 2’ 2025ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா படம் அதே திகதியில் வெளியாக உள்ளதால், ஒரே குடும்பத்தில் இரு ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் மோதுவதனை தவிர்க்கப்படுவதாக கூறப்பட்டு சர்தார்2 படத்தினை தள்ளிவைத்துள்ளனர்.
அத்துடன் 2026 பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘சர்தார் 2’ திரைப்படம் ஜனநாயகனுடன் நேரடியாக மோதும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சிலர் கருதுகின்றனர். இதனால், 2026 பொங்கல் கொண்டாட்டத்திற்கு இப்பொழுதே ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!