• Dec 26 2024

கேபிஓய் பாலாவுக்கு காதல் வந்துருச்சு.. காதலி யார் என்பதை சொன்னாரா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிஓய் பாலா தனக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாகவும் தான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டதாகவும் கூறியிருப்பதை அடுத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா அதன் பின்னர் விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும், குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமூக சேவை செய்வதில் பாலா தீவிர அக்கறை காட்டி வருகிறார் என்பதும் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் போது அவர் வீடு தேடி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் என்பதையும் பார்த்தோம்.

அது மட்டும் இன்றி வாகனங்கள் கூட செல்ல முடியாத சின்ன கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை செய்து கொடுத்தார் என்பதும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் இல்லை என்று அவர் சொல்வதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் கூட செய்யாத உதவியை ஒரு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் பாலா செய்து வருவதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலா தனக்கு விரைவில் திருமணம் ஆகப் போவதாகவும் விரைவில் தன்னுடைய காதலி யார் என்பதை தெரிவிப்பேன் என்று கூறினார். உடனே மாணவ மாணவிகள் கரகோஷத்துடன் உங்கள் காதலி யார் என்று கூறுங்கள் என்று கோஷமிட அதற்கு இன்னொரு முறை கண்டிப்பாக கூறுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில் பாலாவுக்கு காதல் வந்திருச்சு என்றும் விரைவில் அவருக்கு திருமணம் ஆகப்போகிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு நெருக்கமான விஜய் டிவியின் நண்பர்கள் பாலா ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாக கூறிய நிலையில், தற்போது அவரே இந்த உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement