• Apr 25 2026

குழந்தை பெத்துக்க கல்யாணம் எதுக்கு?- திவ்யா சத்யராஜ் கேட்ட அதிரடி கேள்வி.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. உறவுகள் குறித்து அவர் பகிர்ந்த பார்வை, பாரம்பரிய கருத்துக்களிலிருந்து மாறுபட்டதாக இருப்பதால் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டாலே அவர்கள் கட்டாயமாக ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை என்றும், அவர்களுக்குள் உண்மையான காதல் மற்றும் புரிதல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும், ஜாதகம் பார்க்கும் திருமணங்கள் அல்லது ஒரே மதத்திற்குள் மட்டுமே நடக்கும் கல்யாணங்கள் மீது தனக்கு அதிக நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால், அவர்கள் எந்த பின்னணியிலிருந்தாலும் சேர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என்ற அவரது கருத்து பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, திருமணம் இல்லாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது கூட தவறில்லை என்ற அவரது கருத்தும் சமூகத்தில் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. உறவுகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு என்பதையும், சமூகம் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது ஆதரவும், எதிர்ப்பும் கலந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement