• Dec 26 2024

மலேசியா மாமாவுக்கு ஸ்கெட்ச் போட்ட முத்து.. வார்னிங் கொடுத்த ரோகிணி! கறிக்கடைக்காரர் ஸ்டைலில் சரசரவென சிதறிய காய்கறிகள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இன்றைய சிறகடிக்க  ஆசை சீரியல் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி மலேசியாவில் இருந்து வந்த மாமா, விஜயாவை பார்த்து உங்களை சம்மந்தி என்று கூப்பிடவே மனசு வரல ஏன்டா நீங்க அவ்வளவு ஜங்கா இருக்கீங்க என்று சொல்ல, விஜயா வெட்கத்தில் சிரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, மாப்பிள்ளைக்கு நூறு தட்டில் சீர் செய்யணும் என்று சொல்ல, ஒரு தட்டு இங்க இருக்கு  மிச்ச 99 தட்டும் எங்க மலேசியாலையா இருக்கு என்று முத்து கேட்க, ஆமா.. அவங்களுக்கு பிஸ்ஸா கிடைக்கஎன்று சொல்ல, பிஸாவா? என்று கேட்க, அது விசா.. அங்கிள் இப்படி தான் கதைப்பாரு என ரோகிணி சமாளிக்கிறார்.


அந்த நேரத்தில், முத்துவை பார்த்து இவர் தான் குடிகார முத்துவாண்டு கேட்க, அனைவரும் ஷாக் அடைகின்றார்கள். அப்போ ரோகிணி, வீட்டுல நடந்த சில பிரச்சனையை சொன்னன்.. அத மாமா தப்பா புரிஞ்சிக்கிட்டாரு என சொல்ல,  ஏன்?  உங்களுக்கு வேற ஒண்ணுமே சொல்ல இல்லையா மீனா கேட்கிறார்.

அதன் பிறகு ஸ்ருதி, மலேசியால நீங்க எங்க இருக்கீங்க என்று கொஞ்ச இடத்தின் பெயரை சொல்லி கேட்க, அவர் என்ன பாப்பா இந்த பிள்ளை ஒரே  சாப்பாட்டு பெயரா சொல்லிட்டு இருக்கு என்று சொல்ல, அதையும் ஒருமாதிரி  சமாளிக்கிறார் ரோகிணி.


அதன் பிறகு முத்து இளநீர் வெட்ட செல்ல அங்கு, முத்துவும் செல்வமும் இவரை பார்த்த மலேசியா காரன் மாதிரி இல்லையே  குடிக்க வச்சு தான் இவருடைய  உண்மையை வாங்கணும் என பிளான் போடுகிறார்கள்.

பிறகு  ரோகிணி அவரை ரூமுக்குள் அழைத்துச் சென்று நீங்கள் சொல்லிக் கொடுத்த டயலாக் மட்டும் பேசினா போதும், வேற ஒண்ணுமே பேச கூடாது என வார்னிங் கொடுக்கிறார்.


அடுத்து விஜய், ரோகினி, ஸ்ருதி, மூவரும் காய்கறி வெட்டிக் கொண்டிருக்க, அங்க வந்த அண்ணாமலை தேங்காய் துருவி கொடுக்கிறார். அதற்கு என்ன சம்மந்திய தேங்காய் துருவ விட்டிங்க என்று கறிக்கடைக்காரர் கேட்க,  நம்ம வேலையே நாம தானே செய்யணும் என்று அண்ணாமலை கூறுகிறார்.


நாச்சியார் பாட்டி என்ட புள்ள ரயில்ல என்ஜின் டிரைவரா இருந்தார் என்று சொல்ல, என்ன டிரைவரா என்று  மலேசியா மாமா இழுக்க, அந்த இடத்துக்கு வந்த முத்து என்ன டிரைவர் என்டா இழுக்கிறீங்க என கேட்கிறார். 


பிறகு விஜயா மரக்கறி வெட்டி கொண்டிருக்க, நீங்க இப்படி வெட்டினா  நைட்டுக்கு தான் சமைப்பீங்க என்று சொல்லி மரக்கறிகளை  சரசரவென கறிக்கடைக்காரர் வெட்டி தள்ள, இவரைப் பார்த்த கறிக்கடையில் வேலை செய்ற மாதிரியே இருக்கு என முத்து சொல்ல, ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.

இப்படியே விட்டா கடைசில மாட்டிக்கனும் என்று நினைத்த ரோகினி, மாமா நீங்க சுடுதண்ணி கேட்டிங்களோ, ரூமில் வச்சிருக்கேன் வாங்க குடிக்க என்று ரூமுக்கு அழைத்து செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement