• Dec 26 2024

ஹிந்துக்கள் பற்றி நடிகை ரேவதி போட்ட பதிவு.. விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. தற்போது இயக்குனராகவும் அவர் படங்கள் இயக்கி வருகிறார். அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்ற படத்தை ஒரு வருடத்திற்கு முன் இயக்கி இருந்தார்.


தற்போது ரேவதி அயோத்தி ராமர் பற்றி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. ஹிந்துக்கள் என்றால் "நேற்று ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது."


"விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்." "மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது."ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்" என ரேவதி தெரிவித்து இருக்கிறார்.


இந்த பதிவினை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் சிலர்  இத்தனை நாள் உங்களை யார் தடுத்தது? என நெட்டிசன்கள் ரேவதியை விமர்சித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement