தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக திகழும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தானாவுக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழா ஒரு வாரத்திற்கும் மேலாக பல கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, அவர்கள் அணிந்த ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் புகைப்படங்களுக்காக அவர்கள் பதிவிடும் கேப்ஷன்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்த நிலையில், ஹால்டி நிகழ்வின் புகைப்படங்களையும் ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, அந்த நாள் ஹோலி பண்டிகையைப் போல வண்ணங்களால் நிரம்பியதாக இருந்தது. குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து கலர் பொடிகள், தண்ணீர், இசை என உற்சாகமாக கொண்டாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு உற்சாகமாக இருந்தோம். அந்த நாள் திருவிழாவாக காணப்பட்டது. அதற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மலைகள், தோட்டங்கள் மற்றும் நதிக்கரையுடன் ஒரு சொர்க்கம் போல இருந்த அந்த இடம் என்னுடைய வாழ்வில் மிக அழகான நினைவாகிவிட்டது என்று கூறியிருந்தார்.
மேலும் ஹால்தி ஒரு போர் போல நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுபோலவே மதியத்திற்கு பிறகு அனைவரது உடைகளும் கிழிந்தது. கலர் பொடிகள் பூசி ரகளை செய்தோம். நான் அணிந்திருந்த குர்தாவும் கிழிந்து விட்டது. ஆனால் இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களுக்காக எதையும் இழக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!