தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னிகளாக திகழ்ந்தவர்கள் தேவையாணி மற்றும் ரம்பா. பல ஹிட் படங்களில் தனித்துவமான நடிப்பு மற்றும் அழகு என்பவற்றைக் கொண்ட இருவரும் திரையுலகத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்தவர்கள். இப்போது நடிகைகளாக இருந்த காலத்தைக் கடந்து இருந்தாலும் இப்பொழுதும் அவர்களது நட்பு தொடர்கிறது என்பது உற்சாகமான செய்தியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவையாணி, சமீபத்தில் தனது நெருங்கிய தோழியும் நடிகையுமான ரம்பாவின் வீட்டிற்கு சென்று, அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
புகைப்படங்கள் மூலம் தேவையாணி, ரம்பா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசி நேரத்தைக் கழித்துள்ளனர் என்பதனை அறியமுடிகிறது. இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பிரபலங்களாக இருந்தாலும், தேவையாணியும் ரம்பாவும் இன்று குடும்ப வாழ்க்கையை முதன்மையாகக் கொண்டு சினிமாத் துறையிலிருந்து விலகியிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். திரையுலகத்திலிருந்து சில காலம் விலகிய அவர், சமீபத்தில் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் மீண்டும் தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த சந்திப்பில் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகும் தோழிகளாக பழைய நாட்களை மீண்டும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
Listen News!