• Dec 27 2024

பொன்னியின் செல்வன் வானதிக்கு இன்று பிறந்தநாள் , இவரின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்படங்களில் பணி புரியும் நடிகையான சோபிதா துலிபாலா மிஸ் இந்தியா  2013 பட்டத்தை வென்றதோடு மிஸ் எர்த் 2013 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.அத்தோடு இவரின் திரையுலக பயணமானது 2016 இல் அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 இல் துலிபாலா மூலமாக ஆரம்பமானது.


தொடர்ந்து மேட் இன் ஹெவன் என்ற அமேசான் பிரைம் வீடியோ நாடகத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.தெலுங்கு மற்றும் மலையயாள படங்களில் நடித்து வந்த சோபிதாக்கு தமிழில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்க பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார்.


தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மங்கி மேன் மூலம் ஹாலிவுட்டிலும் தடம்பதித்தார்.அவ்வகையில் இந்திய திரையுலகம் தாண்டி ஹோலிவுட்டிலும் நடித்துக்கொண்டிருக்கும் சோபிதா துலிபாலாவிற்கு இன்று பிறந்தநாள்.பிரபலங்களிடம் இருந்தும் அவரின் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன. அத்தோடு இவரின் சொத்து மதிப்பு இன்றைய நிலையில் ஒரு மில்லியன் இந்திய ரூபாய்களாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement