• Dec 27 2024

அரைகுறை ஆடையுடன் பேமிலி போட்டோ எடுத்த ஆலியா பட் சிரிப்புடன் போஸ் கொடுக்கும் ரன்பீரின் தாய்

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியான ஆலியா பட். இவர்கள் இருவரின் நடிப்பில் இறுதியாக பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தொடர்ந்து ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைத்துறையில் பெரும் வெற்றி பெற்றதோடு பல சர்ச்சைகளுக்கும் உள்ளானது.


இந்நிலையில்  ஆலியா பட்   ஜிக்ரா படத்தின் படப்பிடிப்பிலும் ரன்பீர் கபூர் தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து  ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.நேற்றைய தினம் ஆலியா பட்  தனது இன்ஸ்டா பக்கத்தில் "எனது விலைமதிப்பற்ற தருணங்களுடன் அன்னையர் தின வாழ்த்துக்கள்" எனும் தலைப்புடன் ஓர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் வெள்ளை நிற ஆடையில் அனைவரும் அமர்ந்திருக்கும் இப் புகைப்படத்தில் ஆலியா பட் அவரது  கணவர் ரன்பீர் கபூர் , மாமியார் நீது கபூர் மற்றும் அம்மா சோனி ரஸ்தான் மற்றும் அலியா பட்டின் சகோதரி ஷாஹீன் பட் ஆகியோர் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இவ் குடும்ப படத்தில் ஆலியா பட்  வெறும் சேட் ஒன்றை மட்டும் அணிந்தவாறு காணப்படுகின்றார். இது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் குடும்ப புகைப்படத்தில் கூட இவ்வாறு கவர்ச்சி தேவையா என பலர் விமர்சித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement