• Apr 29 2026

ரத்ன குமாரின் அடுத்த சம்பவம் ரெடி.! - மிரட்டும் '29' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ..

shali / 57 minutes ago

Advertisement

Listen News!

தனித்துவமான கதை சொல்லல் பாணியை வெளிப்படுத்திய இயக்குநர் ரத்ன குமார், தற்போது ‘29’ என்ற புதிய படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் Lokesh Kanagaraj-இன் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு Sean Roldan இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் ‘THE WORLD OF 29’ எனும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் படத்தின் கதை சூழல், கதாபாத்திரங்களின் மனநிலை, மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் குறித்த சுருக்கமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரத்ன குமார் தனது வழக்கமான டார்க் மற்றும் ரியலிஸ்டிக் அணுகுமுறையை இந்த படத்திலும் கொண்டு வந்துள்ளார் என்று க்ளிம்ப்ஸ் காட்டுகிறது.

படம் வரும் மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புதிய கதை சொல்லல் மற்றும் வித்தியாசமான காட்சியமைப்பால் ‘29’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இந்த படம் கவனம் ஈர்த்து வருகிறது.


Advertisement

Advertisement