இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம், அதன் கதை அமைப்பு மற்றும் உணர்ச்சி ரீதியான அணுகுமுறையால் கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ‘WORLD OF 29’ நிகழ்வில், கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் கூறியதாவது, இந்த படம் 29 வயதான சத்யா மற்றும் 21 வயதான விஜி ஆகியோருக்கிடையிலான காதலை மையமாகக் கொண்டது. வயது வித்தியாசம் சாதாரண அம்சமாக அல்லாமல், கதையின் முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விஜி என்ற கதாபாத்திரம் தெளிவான எண்ணங்களைக் கொண்டவளாக இருக்கும் நிலையில், சத்யா குழப்பமான மனநிலையுடன் விஜியை மட்டுமே சுற்றி வாழும் மனிதராக சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2010 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இப்படம், இசை மற்றும் உணர்வுகளின் மூலம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Listen News!