• Dec 26 2024

மறைந்த வெற்றி துரைசாமி அஜித்தின் மிக நெருங்கிய நண்பரா? வைரல் புகைப்படங்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

 முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நிலையில் திடீரென அவரது கார் சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவரது கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியை தேடும் பணியில் கடந்த சில நாட்கள் மீட்பு படையினர் ஈடுபட்ட நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து வெற்றி துரைசாமி இந்த விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மகனை பறிகொடுத்த சைதை துரைசாமிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கமல்ஹாசன், அதிமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் வெற்றி துரைசாமி, அஜித்தின் நெருங்கிய நண்பர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அஜித்தை போலவே அவரும் இயற்கை ஆர்வலர் என்றும் தனது தந்தை ஒரு அரசியல் தலைவராக இருந்த போதிலும் அவர் ஒரு சாதாரண எளிய மனிதராக இருந்தார் என்றும் அதுதான் அஜித்தை கவர்ந்தது என்றும் கூறப்படுகிறது.


 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஜீத்துடன் எடுத்த புகைப்படத்தை வெற்றி துரைசாமி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் உடன் வெற்றி துரைசாமி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement