• Dec 26 2024

பிரபல பின்னணி பாடகி 35 வயதில் தற்கொலை.. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


பிரபல பின்னணி பாடகி 35 வயதில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரபல பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்பவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 35.

விஜயலட்சுமி என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் உத்தரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று அவரது அறை பூட்டியிருந்த அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்


காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து அறையின் சென்று பார்த்தபோது பாடகி மல்லிகா ராஜ்புத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மகள் மரணம் குறித்து மல்லிகா ராஜ்புத்  தாய் சுமித்ரா கூறிய போது  ’நாங்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம், மல்லிகா எப்போது தற்கொலை செய்து கொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து விளக்கும் எரிந்து கொண்டிருந்ததால் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. அதன் பின்னர் ஜன்னல் வழியாக நான் பார்த்தபோது அவள் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே நான் என் கணவரையும், மற்றவர்களையும் அழைத்தேன் என்று கூறியுள்ளார்


இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் கூறியபோது ’இது திட்டமிட்ட தற்கொலை போல் தான் தெரிகிறது, வேறு ஏதும் சந்தேகம் இல்லை, இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரியும்’ என்று கூறியுள்ளனர். 35 வயது இளம் பாடகி மல்லிகா ராஜ்புத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement