• Dec 25 2024

விஜயகாந்த் இல்லத்துக்கு வந்த சிவகார்த்திகேயன்... கண்ணீர் விட்ட பிரேமலதா... ஆறுதல் கூறிய சிவகார்த்திகேயன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்னும் பல ரசிகர்கள் , பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர் .


அந்த வகையில் இன்றைய தினம் சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இந்திய பிரபல நடிகரான சிவகார்த்திகேயன்  மனைவியுடன் சென்றுள்ளார்.  இல்லத்தில் வைக்கப்பட்ட கேப்ட்டன் உருவ படத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய  சிவகார்த்திகேயன்  உருவ படத்திற்கு மலர் தூவி வணங்கியுள்ளார் . 


பிரேமலதா மற்றும் விஜயகாந்த் மகன்மார் இருவருக்கும் ஆறுதலும் கூறியிருந்தார். கடந்த 28ம் திகதி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு பொது மக்கள் , பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


குறிப்பாக அவருடைய மறைவின் போது அஞ்சலி செலுத்த இயலாத பிரபலங்கள் , பொது மக்கள் தொடர்ந்து பத்து நாட்களாக நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .  இந்த நிலையில் குறிப்பாக இன்று காலை சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement