• Dec 26 2024

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு அவசரமாக போன் செய்து பேசிய மீனா! என்ன காரணம் தெரியுமா? இனி எப்படி சமாளிக்க போறாங்க?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமாக இல்லத்தரசிகளால் கொண்டாடப்படுவது தான் பாக்கியலக்சுமி, சிறகடிக்க ஆசை என்ற சீரியல்கள்.

சாதாரண பெண்களின் குடும்ப வாழ்கை, கல்யாணம், மாமியார் வீடு, பெண்களின் அடிமை வாழ்க்கை, அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள், இதை எல்லாம் தாண்டி எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் படைப்பாக இந்த சீரியல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ஒவ்வொரு தனித்துவம் காணப்படுகின்றது.


இந்த நிலையில், விஜய் டிவியில் மற்றுமொரு புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இவ்வாறான நிலையில், அதற்கான அடுத்த ப்ரோமோ தொடர்பில் பாக்கியாவும், மீனாவும் போனில் பேசிக்கொண்ட உரையாடல் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதன்படி அதில், சின்ன மருமகள் ப்ரோமோவில் ஸ்கூல் படிக்கிற பொண்ண அவ விருப்பமே இல்லாம கட்டி வைக்கிறாங்க..அது எப்படி அக்கா..அவங்க அம்மா, அப்பா இப்படி முடிவு எடுக்கலாம். தமிழ்செல்வி இதை எப்படி சமாளிக்க போறாளோ.. என இருவரும் பேசிக் கொண்டு உள்ளதோடு, நாளைய தினம் சின்ன மருமகள் சிரியலுக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகும் என கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement