• Apr 23 2026

சர்வதேச திரைப்படவிழாவில் களமிறங்கும் SK ,சூரி காம்போ! அந்த புதுப்படம் பெயர்...

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரே மாதிரியாக நடிக்காமல் தங்களது நடிப்பிலும் ,அவர்கள் தெரிவு செய்யும் கதாபாத்திரங்களிலும் மாற்றங்களை காட்டி இன்று அதிக ரசிகர்களை கொண்ட சிலர் உள்ளனர். அவ்வாறே காமடியனாக இருந்து சமீபத்தில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் சூரி ஆவார்.  


கடந்தகால படங்களில் துணை கதாபாத்திரங்களாக நடித்து வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் வரும் பரோட்டா காட்சியின் மூலம் காமெடியனாக பிரபலமானவர் சூரி ஆவார். இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் விடுதலை மற்றும் கருடன் திரைப்படங்களின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் கொட்டுக்காளி ஆகும். தற்போது இந்த திரைப்படம் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.   




Advertisement

Advertisement