• Dec 26 2024

பாக்கியாவை விட்டு நிரந்தரமாக பிரிந்த செல்ல மகன்? படாதபாடு படும் ஈஸ்வரி! புதிய சிக்கலில் ரெஸ்டாரண்ட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில், விஜே விஷாலுக்கு பதிலாக புதிய எழில் மாற்றப்பட அவர் தனது புது படத்தின் கதையை டைரக்டரிடம் சொல்வதற்காக தாத்தாவிடமும் பாக்கியாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்கிறார்.

அதன்பின் ராமமூர்த்தி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று ரூமுக்கு செல்ல, பாக்கியா நான் ரெஸ்டாரண்ட் போகாம உங்களை பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு ஒன்றும் வேண்டாம் நீ வேலைய பாரு என்று சொல்ல, அப்படின்னா அமிர்தா  வீட்டு வேலைய பாக்கட்டும் என்று சொல்கிறார்.

ஜெனி நான் வீட்டுல தான் இருக்கிறேன் தாத்தாவை  பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல, வேணாம் நீ குழந்தையை பார்த்துக்கோ அமிர்தா வீட்ட பார்க்கட்டும் என்று சொல்கிறார். மேலும் இன்றைக்கு பால்காரர் வருவார் அவருக்கு பணம் கொடுக்கணு, ஈபி ல இருந்து வருவாங்க, பேப்பர் காரங்க வருவாங்க, மாமாக்கு சாப்பிட முன்னாடிபின்னாடி மாத்திரை கொடுக்கணும் என்று பேப்பரில் எழுதி வைத்து அமிர்தாவிடம்  கொடுத்துட்டு செல்கிறார். இதனால் ஜெனியின் முகம் வாடுகிறது.


இதை அடுத்து செழியன் வீட்டுக்கு வர ஜெனி டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க, நான் வீட்டு வேலைகளை பொறுப்பா பார்க்க மாட்டேனா? அதை ஏன் அமிர்தா கிட்ட சொல்றாங்க என்று கேட்க, அமிர்தாவுக்கு அதெல்லாம் பார்த்து பழக்கம். அதனால சொல்றாங்க நீங்க இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் கமலா, மையு,ராதிகா  ஆகியோர் காபி குடித்துக்  கொண்டிருக்கிறார். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த ஈஸ்வரி காபி காபி என கத்த, ராதிகா எழுந்து போக, கமலா அவரை உட்கார வைத்து நீ போய் ரெஸ்ட் எடு நான் போட்டுக் கொடுக்கிறேன் என சொல்லுகிறார்.


இன்னொரு பக்கம் பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு அருகில் இருக்கும் கடைக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு இருக்க, அந்த கடையின் ஓனர் பாக்கியாவிடம் நீங்கதான் ரெஸ்டாரன்ட்  ஓனரா என்று கேட்கிறார். மேலும் தான் பக்கத்தில் இருக்கின்ற கடையை வாங்கியதாகவும் அதில் பார் வருவதால் உங்களுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

இந்த விஷயத்தை பாக்கியா செல்வி மற்றும் ஏனையவர்களிடம் சொல்ல, அவர்கள் இதெல்லாம் சரியா வராது இங்க பார் வரக்கூடாது என்று அதை பேசி நிறுத்தி வேணும் என்றும் சொல்லுகிறார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

இதேவேளை இந்த சீரியலில் இத்தனை ஆண்டு காலமாக பாக்கியாவின் செல்ல மகனாக நடித்த விஜே விஷால் விலகியதும் அவருக்கு பதிலாக வந்தவரை ரசிகர்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement