• Dec 25 2024

இப்படி ஒரு குணமா?? நண்பனுக்காக படவாய்ப்பை விட்டுக்கொடுத்த பிரதீப்!!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட கவினின் நண்பரான பிரதீப் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். 

இவர் அருவி படத்தில் துணை கதாபாத்தில் நடித்து பிரபலமானார். பின்பு வாழ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பின்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார்


இவர் இந்த சீசனில் உண்மையான முகத்துடன் விளையாடி வருவதால் ரசிகர்கள் பிரதீப்புக்கே ஆதரவினை வழங்கி வருகின்றார்கள் இந்நிலையில் பிரதீப்பின் நண்பர் கூறிய விடயம் பிரதீப்மேல் இருக்கும் மதிப்பினைாஇன்னும் அதிகரிக்க செய்திருக்கின்றது. இந்நிலையில் பிரதீப்பின் நண்பர் ஆஷிக் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது பல விடயங்களைக் கூறியுள்ளார்.


கவின் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற டாடா திரைப்படத்தில், முதலில் நடிப்பதற்கு பிரதீப்பிற்கு தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், இப்படத்தில் கவின் நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும் தன்னைவிட விட அவனுக்கு இப்படம் சிறப்பாக இருக்கும் என்று கூறி அவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்துவிட்டார்.


ஏனெனில் பிரதீப்பும் டாடா படத்தின் இயக்குனரான கணேஷ் பாபுவும் ஒன்றாக கல்லூரியில் விஸ்காம் படித்தவர்கள், நல்ல நண்பர்கள் என்றும் கவினும் அந்த கல்லூரியில் தான் படித்தார் ஆனால் அவர் வேறு பிரிவு படித்தார் என்று உண்மையை கூறியுள்ளார்.

இவ்விடயம் ரசிகர்கள் மத்தியில் பிரதீப் மேல் இருக்கும் மதிப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

Advertisement

Advertisement