• Oct 26 2024

நான் ராஜா..!! தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் பகுபலி பிரபாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் வெளியான 'ஈஸ்வர்' என்ற திரைப்படம் மூலம் நாயகனாக பிரபலமான பிரபாஸ், அதைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த 'வர்ஷம்' என்னும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர், பின்னர்  பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய அளவிலும் டாப் கியர் எடுத்தது.பாகுபலி பாகம் 1 & 2 திரைப்படங்கள் மூலமாக தெலுங்கு, தமிழ் மற்றும் தென்னிந்திய திரை உலகை தாண்டி, இந்திய அளவிலும், உலக அளவிலான இந்தியர்களின் மத்தியிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பிரபாஸ் புகழ்பெற்றார்


இவர் சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக, பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்திலும் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, KGF படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்திலும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோருடன் இணைந்து பெயரிடப்படாத "Project K" என குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்திலும் பிரபாஸ் நடிக்கின்றார்.


தற்போது பிரபாஸிற்கு 44 வயதாகின்ற நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் பிரபாஸின் சொத்து விபரம்  தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். அந்தவகையில் அவரின் சொத்து மதிப்பானது சுமார் 237 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும், இது தவிர 65 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பண்ணை வீடு வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாது  2 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஒரு கோடி மதிப்புள்ள ஜாகுவார், 60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் எட்டு கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் என பல சொகுசு கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.

Advertisement