• Dec 25 2024

பிரபல நடிகரின் மனைவியை ரொமான்ஸ் ஆக புகைப்படம் எடுத்த தளபதி விஜய்.. குவியும் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரின் மனைவியை தளபதி விஜய் ரொமான்ஸ் ஆக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி என்பதும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது பலர் அறிந்ததே.

இந்த நிலையில் ஆர்த்தி ரவி பிரபல நடிகை போலவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களை குவித்து வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அவர் ரசிகர்களிடம் உரையாடிய நிலையில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் இதுவரை வெளியே வராமல் இருந்தால் அந்த புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு அவர் ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவியை பக்கா ரொமான்ஸ் ஆக தளபதி விஜய் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement