தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன், தனது அசாத்தியமான நடிப்பாலும் கவர்ச்சியாலும் பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சிம்ரன், கடந்த ஆண்டு குட் பேட் அக்லி படத்தில் கேமியோவாக தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. படம் பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. 90களில் வலம் வந்த சிம்ரன் இன்றும் அதே வலிமையுடன் திரையில் ஜொலிக்கிறார் என்பதை இந்தப் படம் உறுதிப்படுத்தியது.

2003ஆம் ஆண்டு தீபக்கை திருமணம் செய்துகொண்ட சிம்ரன், இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். குடும்பத்தையும் தொழிலையும் சமனாக கையாளும் சிம்ரனின் பயணம் பலருக்கும் உத்வேகமாக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் தன்னுடைய மாஸ் லுக்கில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு அதில் சிம்ரனின் அழகும் வர்ணிக்கப்பட்டு வருகிறது.
Listen News!