• Apr 30 2026

பொய் குற்றச்சாட்டால் என் குடும்பம் உடைந்தது.! விஜய் குமார் வேதனை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

யூடியூபர் மற்றும் ரெசார்ட் வெப் தொடரின் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட விஜய் குமார் , கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

அதாவது, ரெசார்ட் வெப் தொடரில் ஸ்ரீநிதி கதாபாத்திரத்தில் நடித்த அனுகிரஹா, விஜய் குமார் தன்னை பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு வருட ஒப்பந்தம் போட்டு, படப்பிடிப்புக்கு அழைக்காமல், சம்பளம் கொடுக்காமல் வேறு படங்களில் சேர விடாமல்இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் மன உளைச்சலால் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, விஜய் மனைவி நக்ஷத்ரா வீடியோ வெளியிட்டு, அனுகிரஹாவுக்கு பதிலடி கொடுத்தார். இரு தரப்பும் மாறி மாறி வீடியோக்கள் வெளியிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பல இன்ஃப்ளுயன்சர்கள், ஊடகங்கள், நடிகர்கள் என பலரும் விசாரிக்காமலேயே அனுகிரஹாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.


அதன்பின் நடந்தது இதுதான் என விளக்கம் கொடுத்து இருந்தார் விஜய். ஒருகட்டத்தில் அனுகிரஹா சொன்னது பொய் என தெரியவந்தது. இதனால் இறுதியில் அவர்  தனது அனைத்து வீடியோக்களையும் நீக்கி மறந்துவிட்டார் என விஜய் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இச் சம்பவம் தொடர்பில் தானும் தனது குடும்பமும் மிகவும் மன வேதனைப்படுவதாக பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக தானும் தனது குடும்பமும் கடுமையான மன வேதனையை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் பரவிய பொய்க் குற்றச்சாட்டுகளை பலரும் உண்மை சரிபார்ப்பின்றி நம்பி விமர்சித்ததால், தனது பெயரும் புகழும் பாதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு முன்வைத்த அனுகிரஹா வீடியோக்களை நீக்கியிருந்தாலும், ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானம் நீங்காது என அவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்து, ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தனது மனைவி நக்ஷத்ரா மீது பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

உண்மையை அறியாமல் யாரையும் குற்றம்சாட்ட வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement