80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் நடிகை நதியா. ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.
எனினும், தனது கேரியர் உச்சத்தில் இருந்தபோதே சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
நதியாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் நடித்த எந்தப் படத்திலும் கிளாமர் ரோல் ஏற்கவில்லை என்பதே. இதன் மூலம், கிளாமர் இல்லாமலும் ஒரு நடிகை பெரிய வெற்றியை பெற முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ உள்ளிட்ட சில படங்களில் மீண்டும் நடித்தார். தற்போது அவர் பெரிதாக சினிமாவில் செயல்படவில்லை.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘Michael’ பயோபிக் படம் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தை நடிகை நதியா பாராட்டி தனது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மைக்கேல் ஜாக்சனின் பிரபலமான ‘Smooth Criminal’ பாடலில் வரும் ‘lean’ டான்ஸ் போஸை மீண்டும் செய்து எடுத்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் இன்னொரு ஹிப் டான்ஸ் ஸ்டெப்பையும் அவர் முயற்சி செய்து ரீகிரியேட் செய்துள்ளார். அத்துடன், “Lean போஸை முயற்சி செய்தேன்!” என்று சிரிப்புடன் குறிப்பிட்ட அவர், “இந்த ‘Michael’ படம் கொண்டாட வேண்டிய ஒரு தருணம்… ஒவ்வொரு பீட்டிலும் நெகிழ்ச்சி!” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறிய நதியா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜாஃபர் ஜாக்சனின் நடிப்பையும் “அசத்தல்” என பாராட்டியுள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Listen News!