விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா, விஜய்யுடன் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஆரம்ப காலத்தில் கவனம் பெற்றவர். பின்னர் 90களில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
சினிமாவிலிருந்து விலகி ஆகாஷை திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். பின்பு மேலும் இரண்டு திருமணங்கள் செய்தும் அதுவும் விவகாரத்தில் முடிந்தன.
அதற்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பிய வனிதா, ‘Mrs & Mr’ என்ற படத்தை இயக்கினார். இதில் ராபர்ட் மாஸ்டர், ஷகிலா, கிரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மற்றும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

மேலும், படத்தில் ‘சிவராத்திரி’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். ஓடிடியில் வெளியாகாத நிலையில், வனிதா தனது படத்தை யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த வனிதா, மறைமுகமாக நடிகை ஒருவரை தாக்கி பேசியதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதன்படி அவர் கூறுகையில்,
இப்போ இருக்குற ஷோக்கள்ல எல்லாம் சம்பந்தமே இல்லாதவங்க ஜட்ஜா இருக்காங்க. பாட்டு ஷோனா பாடகர்களையும், டான்ஸ் ஷோனா டான்ஸ் மாஸ்டர்கள் அல்லது ஷோபனா மாதிரி சாதிச்சவங்களையும் தான் கூப்பிடணும்.
ஆனா, சம்பந்தமே இல்லாம நாலு படத்துல டான்ஸ் ஆடுன சினிமாக்காரங்களை ஜட்ஜா போடுறாங்க. நீங்க ஒரு Chef ஆக இருந்தா மட்டும்தான் சமையல் ஷோவுக்கு ஜட்ஜா இருக்கணும்.
ஆனா அப்படி இல்லாதவங்களை கூட்டிட்டு வந்து உட்கார வைக்கிறாங்க. இந்த கான்செப்ட்டே எனக்கு புரியல என தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது நடிகை ரோஜா களமிறங்கி உள்ள நிலையில், வனிதாவின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.
Listen News!