• Dec 25 2024

TRPயில் அதளபாதாளத்திற்கு சென்ற எதிர்நீச்சல்! மாஸ் காட்டும் புதிய சீரியல்கள் எவை தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆனாலும் பரபரப்பாக ஒளிபரப்பி வந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் குறித்த சீரியலுக்கு ரசிகர்கள் குறைந்து விட அதன் டிஆர்பியும் சரிவை நோக்கிச் சென்றுள்ளது.

அத்துடன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் வெற்றி, தோல்வி அதன் டிஆர்பி புள்ளிகளை வைத்து தான் கணிக்கப்படுகின்றன. அதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


அதன்படி, எதிர்நீச்சல் சீரியலில் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அதற்கு காரணம் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். எனினும் அவரின் திடீர் மறைவு எதிர்நீச்சல் சீரியலையும் பெரியளவில் பாதித்துள்ளது

இவ்வாறான நிலையில், டிஆர்பி பெரும்பாலும் முதலிடம் பிடித்துவரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்து 4-வது இடத்துக்கு சென்றுவிட்டது. அண்மையில் தொடங்கப்பட்ட புது சீரியலான சிங்கப்பெண்ணே டிஆர்பியில் எதிர்நீச்சலை முந்தி 3-வது இடம் பிடித்துள்ளது.


இதேவேளை, குறித்த  டிஆர்பி பட்டியலில் வானத்தைப்போல தொடருக்கு முதலிடமும், கயல் சீரியல் இரண்டாவது நிலையிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement