• Dec 25 2024

திருட்டுப்பலிக்கு ஆளாகும் தீபா! இறுதியில் அபிராமி கையால் நடந்த தரமான சம்பவம்! கார்த்திகை தீபம் எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் தான் கார்த்திகை தீபம். இதில் கார்த்திக் ராஜ், அர்த்திகா ஆகியோர் நடித்து வருகின்றனர். அதன்படி இன்று வெளியான எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

மலர - ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இணைந்து நெக்லஸ் ஒன்றை திருடி தீபாவின் பேக்கில் வைத்துவிட்டு நெக்லஸை காணவில்லை என நாடகம் ஆடுகின்றனர். இதையடுத்து தீபாவின் பேக்கில் நெக்லஸ் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

எனினும் அந்த இடத்தில் தீபாவை வீட்டுக் கொடுக்காத கார்த்திக், 'இத தீபா எடுத்து இருக்க மாட்டாங்க, யார் எடுத்தாங்க  என்று நான் வெளிப்படையாக சொன்னா இந்த குடும்பத்துக்கு தான் அவமானம் அதனால நான் சொல்ல விரும்பல' என சொல்கிறார். 


அதே நேரம், 'அந்த நெக்லஸ தீபாவுக்கு கொடுக்கணும்னு தான் ஆசைப்பட்டன். அதுவே தீபா கிட்டயே  போய் சேர்ந்துடுச்சு, அதால ஒன்னும் பிரச்சனை இல்ல' என்று பரமேஸ்வரி பாட்டியும் சொல்லிவிடுகிறார். 

இதையடுத்து 'அந்த நெக்லஸ அபிராமி அம்மா கையால எனக்கு கொடுக்கணும்' என தீபா தன் ஆசையை சொல்ல, வேறு வழியின்றி நெக்லஸை தன் கையாலையே தீபாவுக்கு போட்டு விடுகிறார் அபிராமி. 

அதன்பின், பெட் ரூமுக்கு சென்ற கார்த்திக் மற்றும் தீபா நெக்லஸ் குறித்து பேச, அந்த வழியாக அபிராமி வருகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement