விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் மற்றும் நகைச்சுவை நடிகராகவும் புகழ் பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது ஒரு சிக்கலான விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பரவி வருகின்றன.
இது ஒரு சாதாரண பிரபலங்களின் விவாதம் மட்டுமல்ல, நேரடி புகார்கள், ஆதார வீடியோக்கள், ரொமான்ஸ், மற்றும் கருத்து முரண்பாடுகள் ஆகியவற்றுடன் கூடிய உணர்வுபூர்வமான சிக்கலாக மாறியுள்ளது.
ஜாய் கிரிசில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், “நான் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டேன். தற்போது நான் ஆறு மாதம் கர்ப்பிணி. அவர் என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து ஏமாற்றினார்.”
எனும் வகையில் அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீஸில் ஏமாற்றம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கை துரோகம் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருந்தார். அதற்குப் பின்னர், தனது தரப்பை உறுதிப்படுத்துவதற்காக, அவர் வெளியிட்ட வீடியோவில் ரங்கராஜ், "ஏ பொண்டாட்டி… என்ன பண்ற… மிஸ் யூ… லவ் யூ…"
என ரொமான்ஸாக உருகி பேசும் காட்சி பதிவாகியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களிடையே பல கேள்விகளை எழுப்பின.
இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விவகாரத்தில் எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கத்தையும் அளிக்காமல் மெளனம் சாதித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தற்பொழுது நகைச்சுவை வீடியோக்களாக பரவி வருகிறது. குறிப்பாக, தற்போது "குக் வித் கோமாளி 6" நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் குரேஷி, இந்த விவகாரத்தை நகைச்சுவையுடனும் செம டைமிங்குடனும் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், "மனைவியிடம் எப்படி propose செய்வது என்பதை மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணன் ஸ்டைலில் செய்து காட்டுறேன்...!" எனக் கேப்ஷன் கொடுத்து, ரங்கராஜ் போலவே பேசி, தன்னுடைய பாணியில் கலக்கியுள்ளார்.
அதற்கு பதிலளித்த மாதம்பட்டி ரங்கராஜ், "டேய்… ரொமான்ஸ் பத்தலடா… ரெண்டு வாரம் என்கிட்ட டிரெயினிங் வாடா!" என பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே சிரிப்பையும், சிலரிடையே விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த பதிவிற்கு "இவர் ரொம்ப சந்தோசமா இருக்கார் போலயே.." என்று கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Listen News!