இயக்குனர் கங்கை அமரனின் மகனாக, இசை, நடிப்பு மற்றும் கலையுலகத்தில் பன்முகத் திறமையுடன் பயணித்து வரும் பிரேம்ஜி அமரன், கடந்த சில ஆண்டுகளாக தான் நடித்த பல படங்களில் வித்தியாசமான ஹ்யூமர் மற்றும் டயலாக்குகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றவர்.
44 வயது வரை "முரட்டு சிங்கிள்" என அழைக்கப்பட்ட பிரேம்ஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு மனைவியுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "4.44" என மட்டும் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், இது ஒரு "குறிப்பான நேரத்தை" குறிக்கும் என நினைத்து, அவருக்கு குழந்தை பிறந்திருக்கக்கூடும் என சந்தோஷமாக கருத்து தெரிவிக்க தொடங்கினர்.
"முரட்டு சிங்கிள் இருந்து, ஒரு வருஷத்தில் அப்பா ஆகிட்டாரா?" என ஆச்சரியத்துடன் வாழ்த்தும் செய்திகள் பளிச்சென வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இதுவரை பிரேம்ஜி இதற்கென எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
இது உண்மைதானா? இல்லையா? என்பதை காலமே தான் சொல்லும். ஆனால் ரசிகர்கள் இதற்காக வெயிட்டிங் என பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!