• Sep 05 2025

மகனுடன் Workout பண்ணும் சிவகார்த்திகேயன்...! வைரலாகும் Transformation Video...!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களையும், புகழ்ச்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர். முக்கியமாக, சிவகார்த்திகேயனின் மாஸ் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அனிருத் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வெளியீட்டிற்கு முன்பே பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாகும் அளவிற்கு நடைபெற்றது. இதற்கிடையில், இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Body Transformation Workout Video தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள், ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன. மேலும், அந்த வீடியோவில் அவரது மகன் குகன், அவரது உடற்பயிற்சியில் சேர்ந்து பங்கேற்கும் பாசமிகு தருணம் அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.


இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement