பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி டான்ஸ் ஆட போன இடத்தில மாஸ்டர் ஒராள் ராஜியை தொட்டு இப்புடித் தான் டான்ஸ் ஆடணும் என்று சொல்லுறார். பின் அங்கிருந்த judge ராஜியை பார்த்து நீ வேற ஏதும் dress கொண்டு வரலயா சுடிதார் மட்டும் தான் கொண்டு வந்தனியா என்று கேட்கிறார். அதுக்கு ராஜி இது மட்டும் தான் கொண்டு வந்தேன் என்கிறார். அதனைத் தொடர்ந்து ராஜி அங்கிருந்த மாஸ்டர் தன்னை தொட்டு ஆடுறது பிடிக்காமல் அங்கிருந்து ஓடி வெளியில போறார்.
வெளியில வந்த ராஜி அங்க நடந்த சம்பவத்தை கதிருக்கு சொல்லுவமோ என்று ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். பின் ராஜி கிட்ட judge உங்க name ராஜி என்ன என்று சொல்லிட்டு selfie எடுக்கிறார். அதைப் பார்த்த ராஜி பயத்தோட நிக்கிறார். இதனை அடுத்து கதிர் ராஜிக்கு போன் எடுத்து எல்லாம் ok தானே என்று கேட்கிறார்.
அதுக்கு ராஜி இங்க எந்தப் பிரச்சனையும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்கிறார். அதைத் தொடர்ந்து மயிலோட அம்மா பாண்டியன் வீட்டுக்கு வந்து நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு ஆம்பிள பையன் பிறந்திருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி ஊருல இருக்கிற எல்லாருக்கும் குழந்தை பிறக்குது இந்த வீட்டில தான் அப்புடி ஒன்னும் நடக்கல என்று சலிப்பாக சொல்லுறார்.
மேலும் சுகன்யா மயிலோட அம்மா கிட்ட வந்து கோமதியைப் பற்றி தப்பா சொல்லுறார். அதைக் கேட்ட மயிலோட அம்மா இவளை நம்பலாமா என்று மயிலைப் பார்த்து கேட்கிறார். அதனை அடுத்து ராஜி கிட்ட ரெண்டு பேர் வந்து இதுக்கு முன்னாடி ஏதாவது ஷோ செய்தனியா என்று கேட்கிறார்கள். மேலும் யாரவது தாப்பா நடந்தாங்களா என்றும் கேட்கிறார்கள். அதுக்கு ராஜி எதுவுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!