தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் த்ரிஷா. 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த த்ரிஷா, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘சாமி’, ‘கில்லி’, ‘மங்காத்தா’ போன்ற ஒரு சில சர்வதேச ஹிட் படங்களின் மூலமாக, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்காமல் இருந்த த்ரிஷா, கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் இணைந்தார். 'லியோ' திரைப்படத்தில் விஜயுடன் இணைந்ததோடு, சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். இது மீண்டும் த்ரிஷாவை பிஸியான ஹீரோயினாக மாற்றியுள்ளது.
இன்று நடிகை த்ரிஷா தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு பரிசு போன்ற வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது த்ரிஷாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, தற்போது த்ரிஷா வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 130 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு திரைப்படத்தில் நடிக்க அவர் பெறும் சம்பளம் 10 கோடி முதல் 12 கோடி வரை என்று கூறப்படுகின்றது.
Listen News!