வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான 'அரசன்' குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே சமூக வலைத்தளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் இது குறித்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படமும் சமூக உண்மைகளை பிரதிபலிக்கும் வலுவான கதைக்களத்துடன் வருவது வழக்கம் என்பதால், இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும், சமூக அரசியல் கருத்துகளையும் வலுவாக வெளிப்படுத்தும் இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றி மாறன். அவரது படங்கள் விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றி மாறன், அரசன் திரைப்படம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் அதன்போது, “இந்த முறை கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகே படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறேன். பொதுவாக எனது பல படங்களில் கதை வளர்ச்சி படப்பிடிப்பு நடக்கும் போதும் தொடரும். ஆனால் இந்த முறை முழு ஸ்கிரிப்டையும் முடித்த பிறகே வேலை ஆரம்பித்துள்ளோம். அதனால் இந்தப் படம் மற்ற படங்களை விட வேகமாக முடியும் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “படப்பிடிப்பு தற்போது நன்றாக நடைபெற்று வருகிறது. சில நாட்களில் இந்தப் படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ரசிகர்களுக்காக வெளியிடும் திட்டம் இருக்கிறது. ஆனால் அதுவரை இந்தப் படம் குறித்து அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார். இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்களிடையே மேலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
Listen News!