• Apr 29 2025

காஷ்மீர் படுகொலை..! தவறாக புரிந்தவர்களுக்கு விளக்கமளித்த விஜய் ஆண்டனி..

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

அண்மையில் நடைபெற்ற 26 சுற்றுலா பயணிகளின் படுகொலை முழு இந்திய தேசத்தையும் உலுக்கி போட்டது.இந்த பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுமட்டுமல்லாமல் மறுபடியும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. இந்த தீவிர கொலையின் காரணமாக இந்தியர்கள் சிந்துவெளி நீரை பாகிஸ்தானியர்களுக்கு கிடைக்காத வண்ணம் செய்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது குறித்த பிரச்சனை தொடர்பில் நடிகரும் பாடகருமான விஜய் ஆண்டனி பதிவு ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.


குறித்த பதிவில் “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த. அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்" என தனது பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களுக்காக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement