• Dec 26 2024

விஜய்க்கு விழுந்த முதல் அடி.! அவசரமாக களைக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றங்கள்! தளபதிக்கு பாடம் புகட்டிய விஜய் ரசிகர்கள்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்ற முன்னணி நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்கிறார்.

தமிழக வரலாற்றை பொறுத்தவரையில் சினிமா துறையில் நடிக்கும் நட்சத்திரங்களில் சிலர். அரசியலில் களமிறங்கி சிஎம் நாற்காலியை பிடிப்பது எம்ஜிஆர் காலம் முதற்கொண்டு தற்போது வரையில் தொடர்ந்து வருகின்றது.

இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் சீமான், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு அரசியலில் களம் இறங்கினார்கள்.

ஆனாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது உடல் நலத்தை கருதிக் கொண்டு அரசியலில் இறங்கவில்லை. ஆனாலும் படங்களில் நடித்து வருகிறார்.


அடுத்து இளைய தளபதி விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளிக்கும் வகையில், தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய கட்சி பெயருடன் பிரம்மாண்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் விஜய்.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைமைகள் பலரும் விஜய் ஆதரவாக வாழ்த்து தெரிவித்தாலும், அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றம் செய்வதற்கு அங்குள்ள ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழக தலைவர்களால் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் கேரளாவை சேர்ந்த 14 மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில், கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தையும் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு கேரளா நிர்வாகிகளிடம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலே, விஜயை நாங்கள் ஒரு நடிகராக ஏற்றுக்கொள்வோம். ஆனா தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கேரள மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், விஜய் ரசிகர்களே கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்களை களைத்து வருவதாகவும் விஜய்க்கு அரசியல் வேறு சினிமா வேறு எனத் தக்க பாடத்தை புகட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement