• Dec 26 2024

ராதிகாவின் வெளிநாட்டு புருஷன் என்ன ஆனார்? இப்போ எல்லாம் கசக்குதா? வம்பிழுத்த பயில்வான்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக காணப்பட்டவர் தான் பயில்வான்  ரங்கநாதன். தற்போது அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றை  நடத்தி வருவதோடு நடிகர், நடிகைகள் பற்றிய பல கிசுகிசு தகவல்களை வெளிப்படையாக பேசி வருகின்றார்.

90 ஆம் ஆண்டில் பல படங்களில் காமெடி ரோலிலும், வில்லன் ரோலிலும் நடித்திருக்கும் பயில்வான், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகளை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார். இவர் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப் புள்ளியாகவும் காணப்பட்டார்.

மேலும் பிறரது  விஷயங்கள் தொடர்பில் தான் சொல்வது தான் சரி தனக்கு எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இவர் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி பலவாறு பேசியுள்ளார். அவை அனைத்துமே அவதூறுகள் தான் என்பது ரசிகர்களின் கருத்து. ஒரு சிலர் இவரை இப்படியே விடக்கூடாது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராதிகா பற்றியும் பேசியுள்ளார் பயில்வான்.  தற்போது இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், ராதிகா வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் வாழ்ந்தார். அவர் என்ன ஆனார் இதை கேட்பதற்கு உரிமை இல்லை என்று ராதிகா சொல்லுகின்றார்.  அந்த தகவலை சொல்ல வேண்டும் அல்லவா? ராதிகாவுக்கு வெளிநாட்டுக்காரருடன் கல்யாணம் நடந்தது உண்மைதான்.  

ஆனால் ராதிகாவோ எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். ஏம்மா அதுதானே எங்களது தொழில்.   ஒரு காலத்தில் ராதிகா சிறந்த நடிகை அழகாக தமிழ் பேசுகின்றார் என்று நாங்களே எழுதினோம். பசும்பொன் படத்தில் ராதிகா நடித்த போது அந்த மாதிரி கேரக்டரில் வேற எந்த நடிகைகளுக்கும் நடிக்க துணிவில்லை என்று நான் தான் சொன்னேன் அப்போ எல்லாம் இனித்தது. இப்போ உண்மை சொன்னால் கசக்குதா? என கேள்வி எழுப்பி உள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement