தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பரீனா ஆசாத். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தனது இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பரீனா, அந்த தொடருக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சீரியல் உலகைத் தாண்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும், புகைப்பட ஷூட்களில் கலந்துகொள்வதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பரீனா ஆசாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரை பின்னணியில் யோகா செய்யும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயற்கை சூழலில் அமைதியாக யோகா பயிற்சி மேற்கொள்ளும் அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு யோகாவின் முக்கியத்துவத்தை இந்த புகைப்படங்கள் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!