தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அண்மையில் பல்வேறு பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பது தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததற்காக நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
சூதாட்ட செயலிகள் இந்தியாவில் சட்ட ரீதியாக பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், சில செயலிகள் பெயரை மாற்றி, விளம்பரத்திலும் நகைச்சுவை வடிவங்களிலும் நுழைந்து, பொதுமக்களை மீண்டும் ஈர்க்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, பல சினிமா பிரபலங்கள், குறிப்பாக தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இத்தகைய விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, அந்த செயலிகளை தங்களது சமூக ஊடக கணக்குகள் மற்றும் விளம்பர வீடியோக்கள் மூலம் பரப்பியதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்தச் செயலிகளை சட்டவிரோதமாக விளம்பரப்படுத்தியதாக, 29 பிரபலங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தற்போது முக்கியமாக பெயர் குறிப்பிடப்பட்டவர்களாக, நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா ,நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரனிதா சுபாஷ், ஸ்ரீமுகி, வர்ஷினி மற்றும் வசந்தி கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!