சமீபத்தில் வெளியாகிய "ரெட்ரோ " படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் தலைப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடித்து வருகின்றார்.
இதைவிட படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் rj பாலாஜி நடித்து வருகின்றார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
இந்த நிலையில் படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இதே நாளில் கார்த்திக் நடித்த சர்தார் 2 படமும் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது சூர்யா படம் வெளியாகும் காரணத்தினால் இந்த படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!