வேதிகா கடந்த இருபது ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து செயல்பட்டு வரும் திறமையான நடிகையாக திகழ்கிறார். தனது அழகு மற்றும் நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். முனி , பரதேசி போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

காலத்துக்கு காலம் மாறும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் வேதிகா, சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தனது தினசரி வாழ்க்கை, போட்டோஷூட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
குறிப்பாக அவர் வெளியிடும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
இந்நிலையில், தற்போது சேலையில் செம ஹாட் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாரம்பரிய உடையில் கூட மாடர்ன் ஸ்டைல் கலந்த அவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைக் குவித்து வருகின்றனர். இந்த போட்டோஸ் மூலம் மீண்டும் ஒருமுறை தனது அழகால் அனைவரையும் ஈர்த்துள்ளார் வேதிகா.
Listen News!