சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் குறித்து தற்போது முக்கியமான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல், கலவையான விமர்சனங்களுடன் தோல்வியை சந்தித்தது. இதனால், அவரது அடுத்த படமான இந்த ப்ராஜெக்ட் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான புதிய தகவலாக, இந்த திரைப்படத்திற்கு ஒரே ஒருவர் அல்லாமல் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் இசை மற்றும் பின்னணி இசையில் பல்வேறு ஸ்டைல்களை கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுத் தருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!