• May 08 2025

ஷூட்டிங்கில் இளம் நடிகர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..

Mathumitha / 18 hours ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதோ அதே ரீதியில் அதன் அடுத்த பாகமான Kantara Chapter 2 படமும் எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தற்போது Kantara 2 படத்தின் ஷூட்டிங் இடத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. படத்தில் பங்கேற்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் எம்.எப். கபில் Kollur Souparnika ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இறங்கிய நிலையில் இன்று மாலை அவரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்த சோகமான சம்பவம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kantara 2 படத்தின் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அஞ்சலிகள் செலுத்தப்படுகின்றன. இந்த அதிர்ச்சி தகவலால் சினிமா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அஞ்சலிகளையும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதலையும் அளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement