• Apr 27 2025

சென்னையில் நடக்கும் 'கூலி' ஷூட்டிங் – ரஜினியின் சிம்பிள் லுக் வைரல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவரே  ரஜினிகாந்த். இவர் அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு , பாட்ஷா  மற்றும் படையப்பா போன்ற படங்கள் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்த நடிகர். ரஜினி தனது எதார்த்த நடிப்பால் பல உள்ளங்களை கொள்ளை கொண்டதுடன் இவருக்கென  பல ரசிகர்களும் உள்ளனர்.

மேலும் , நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த  'ஜெயிலர்' மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ரஜினியின் அடுத்த வெற்றிப் படமாகவும், ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாகவும் 'கூலி' உருவாகி வருகிறது. அந்தப் படம் பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.


அதில் , ரஜினிகாந்த் தனது அடுத்த படமான கூலி படத்தை சென்னையில் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் , சென்னையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட  ரஜினிகாந்த் மிகச் சாதாரணமான உடையில் வந்துள்ளார்.

அவரது இந்த 'சிம்பிள்' தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை சட்டையில் மிகவும் எளிமையான தோற்றத்துடன் அவர் ஷூட்டிங் லொகேஷனுக்கு வந்தது, அவரது எளிமையை வெளிப்படுத்துகிறது. ரசிகர்கள் அவரது இந்த தோற்றத்தை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement