பிரபல கன்னட நடிகரும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவரும் நடிகர் சுதீப் இன்று தனது பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் பொங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் ரசிகர்களுக்கு சுதீப் முதன்முதலில் அறிமுகமானது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய 'நான் ஈ' திரைப்படத்தின் வாயிலாக. வில்லனாக அவர் நடித்த அந்த படத்தில் சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார்.
மேலும் 'பாகுபலி' திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தப் பிறந்தநாள் சிறப்பை முன்னிட்டு, நடிகர் சுதீப்பின் புதிய திரைப்படமான BRB படத்தின் First Look போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இப்படத்தில் சுதீப் ஒரு மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள First Look போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சுதீப்புக்கு ரசிகர்கள், பிரபலங்கள், திரையுலக பிரமுகர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
Listen News!