• Jul 18 2025

இந்தியன் 2 முக்கிய கதாபாத்திரம் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்...

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898ஏடி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்களே வரும் காட்சியில் நடித்தார் நடிகர் கமலஹாசன். அப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் இந்தியன் 2. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த 2ம் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பான இப்படம் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. விமர்சன ரீதியாக நெகட்டீவ் அதிகம் இல்லை, நிறைய பாசிட்டீவ் கமெண்ட்ஸ் தான் உள்ளது. 

Actress Priya Bhavani Shankar about Pathu Thala Movie

படத்தில் கமல்ஹாசனை தாண்டி சித்தார்த், விவேக், பிரியா பவனி சங்கர் என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பாராட்டுக்களும் குவிந்துள்ளன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக ப்ரியா பவானி ஷங்கர் ரூ. 50 லட்சும் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement