• Sep 04 2025

ஹீரோ இல்லாமல் 100 கோடி..! வெளியான சுவாரஸ்ய தகவல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில்  பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் இணைந்து இருப்பதால்  இது தனித்துவமான திரைப்படங்கள் உருவாகுவதற்கு காரணமாக காணப்படுகின்றன.  

இங்கு தயாரிக்கப்படும் படங்கள் தொழில் நுட்ப நவீனங்களின் பயன்பாடு, திரைக்கதைகள், நடிகர்களின் திறமை ஆகியவற்றின் அடிப்படையில்  இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் வியாபாரம் ஆகின்றன.

முன்னணி நடிகர்களின் படங்கள், அதிலும் குறிப்பாக வசூலில் அதிக இலாபமீட்டும் நடிகர்களின் படங்கள் பான் இந்திய திரைப்படங்களாக உருவாகின்றன. இவை உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் வசூலில் சாதனை படைக்கின்றன.


இந்த நிலையில், ஹீரோ இல்லாமல்  கதாநாயகிகளை வைத்து இயக்கிய திரைப்படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில ஆண்டுகளில் பெண் முன்னணி படங்களும் பாக்ஸ் ஆபீசில் பெரும் சாதனை படைத்தது. ஆனால் தற்போது வெளியான லோகா  திரைப்படம் இதுவரையில் 100 கோடியும், ஏற்கனவே வெளியான மகாநதி திரைப்படம் 90 கோடியையும், ருத்ரமாதேவி என்பது 60 கோடியும், அருந்ததி 70 கோடியும், பாகமதி 64 கோடியும் வசூலித்தது. 

தமிழில் முன்னணி  நடிகைகளாக  திகழும் கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா,  நயன்தாரா ஆகியோர்  கதாநாயகிகளுக்கான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவம் காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

Advertisement