• Sep 04 2025

ஆன்மீக வழியில் செல்லும் ரம்யா பாண்டியன்.. இன்ஸ்டாவில் லீக்கான வீடியோ.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

2016-ம் ஆண்டு விமர்சன ரீதியாக பெரும் கவனத்தை பெற்ற ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். மாறுபட்ட நடிப்பால் சினிமா உலகத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இவர், பின்னர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.


சமீபத்தில், தஞ்சாவூரின் அடையாளமாக கருதப்படும் பெரிய கோவிலில் ஆன்மீக உணர்வுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


அந்த வீடியோவில், அவர் மிகவும் அமைதியாகவும், ஆன்மீகத்துடனும் கோவிலில் நடந்து செல்கிறார். பின்புலத்தில் கோவிலின் அழகு மற்றும் அமைதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement