• Apr 27 2025

16 மணி நேரத்தில் 45 லட்சம்! நான்தான் கழுகு என நிரூபித்தார் ரஜனி காந்த்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நாம் சிறுவயதில் இருந்து ரசித்து வரும் முன்னணி நடிகர்களின் பார்க்காத இன்னொரு பக்கத்தை அருமையாக திரைப்படமாக இயக்க கூடியவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். அவ்வாறு இவர் இயக்கும் அடுத்த திரைபடத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பொதுவாகவே அவர் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் அன்னோன்ஸ்மென்ட்டை வீடியோவாக வெளியிடுவார். அவ்வாறே சமீபத்தில் ராஜனியை வைத்து அவர் இயக்கும்ம அடுத்த திரைப்படத்திற்கான வீடியோவை வெளியிட்டார்.


கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் இதுவரை பார்க்காத ராஜனியை பார்த்தது போல் உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலேயே குறித்த வீடியோ வெளியாகி வெறும் 16 மணி நேரமே ஆகிய நிலையில் இதுவரை 45 லட்சத்துக்கும் மேல் அதாவது 4.5 மில்லியனை கடந்த பார்வையாளரை கொண்டுள்ளது. இதனை ரஜனி ரசிகர்கள் பகிர்ந்து ராஜனித்தான் எப்பவுமே சூப்பர்ஸ்டார் என விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்

Advertisement

Advertisement